தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

ஆந்திரா மாநில சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட தமிழ்நாடு சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 26, 2022, 4:09 PM IST

சென்னை: ஆந்திரா மாநில சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் முறை பழுதாக இருப்பதாக கூறி, இரு மடங்கு சுங்க கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அருகே நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களை இழிவாக பேசியும், தமிழ்நாடு வாகனங்களை அடித்து உடைத்தும் தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடியினர் மற்றும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்திர அரசு மற்றும் காவல் துறையினரை கண்டித்தும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details