மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கிவருகிறது. அந்தவகையில், இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
தமிழர் இயக்கிய படத்திற்கு தேசிய விருது! - தேசிய விருது
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார் இயக்கிய 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா' என்ற படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித்குமார்
அதன்படி, சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 10, 2019, 3:21 PM IST