தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு தரம், சுவை குறித்து முதலமைச்சர் ஆய்வு! - இட்லி சாப்பிட்ட முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம், சுவை குறித்து ஆய்வுசெய்தார்.

tamilanadu chief minister inspect amma hotel in chennai
tamilanadu chief minister inspect amma hotel in chennai

By

Published : Apr 1, 2020, 10:29 AM IST

Updated : Apr 1, 2020, 3:17 PM IST

கரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நகரங்களில் ஏராளமான மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பெருநகர சென்னையில் தங்கியுள்ள வெளிமாநில, வெளியூர்களைச் சேர்ந்த மக்களுக்கு உணவு சரியான முறையில் கிடைக்கிறதா என சோதனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தில் உணவு தரமான முறையில் மக்களுக்கு சென்றடைகிறதா என்றும் சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று ஆய்வுமேற்கொண்டார்.

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு தரம், சுவை குறித்து முதலமைச்சர் ஆய்வு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா அறிகுறி இருந்தால், தேவைப்பட்டால் ஈஷா யோகாவில் பங்கேற்றவர்களைச் சோதனை செய்வோம்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு முடிவுசெய்யும். கரோனா நோயின் தீவிரம் அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலத்தில் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் இன்று மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அம்மா உணவங்களில் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:'அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை' - முதலமைச்சர் உறுதி

Last Updated : Apr 1, 2020, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details