இது குறித்து அவர், 'தென்னக ரயில்வேயின் மேலாளர், இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் அந்தத் துறை சார்ந்த தொடர்பு செய்தி இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தென்னக ரயில்வேக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் என்ன காழ்ப்புணர்ச்சி. மெதுவாக இந்தியை நுழைக்கின்ற மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து இதுபோன்று இந்தியை நுழைக்க முயற்சி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழால் உங்களுக்கு தொலைதொடர்பில் என்ன குறை வந்துவிடப்போகிறது. இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பது அநியாயமான விஷயம், இதை எதிர்த்து திமுக நிச்சயமாக குரல்கொடுக்கும்' என்றார்.