தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2022, 4:33 PM IST

ETV Bharat / state

பெரியார் சிலை விவகாரம் - அவதூறு பரப்பிய தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கைது!

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி கைது
தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி கைது

நாமக்கல் பிரதான சாலையில் நகர அதிமுக சார்பில் 1993ஆம் ஆண்டு தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர் கழுத்தளவு சிலைகள் வைக்கப்பட்டன. திறந்த வெளியில் இருந்த சிலைகள் அதிமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மாலை அந்த சிலைகள் மீது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ ஒன்று மோதியது.

இதில் பெரியார் சிலை அடியோடு கீழே விழுந்து சேதமானது. இதுதொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண் (32) என்பவரைக் கைது செய்தனர். மேலும் அதே இடத்தில் பெரியார் சிலை மீண்டும் நிறுவினர்.

இந்தச்சூழலில் பெரியார் சிலையை வேண்டுமென்றே சிலர் சேதப்படுத்தியதாகக்கூறி வன்முறையைத் தூண்டும் விதமாகவும் மத உணர்வைப்புண்படுத்தும் வகையிலும் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் நகர துணைத்தலைவர் அக்பர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்ததாகவும் அதன்பேரில் அன்றைய தினமே தமிழ்ப்புலிகள் கட்சியினர் பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்த சாலையில் மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கைது

இதனால் இன்று (ஜூலை 27) அக்பர் மீது வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details