தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெப்சி தொழிலாளர் இல்லாமல் படப்பிடிப்பு - தயாரிப்பாளர் சங்கம் - tamil producer council press meet

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளார் சம்மேளனத்துடன் ( ஃபெப்சி) இணைந்து இனி செயல்பட போவதில்லை என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஃபெப்சி தொழிலாளர் இல்லாமல் படப்பிடிப்பு - தயாரிப்பாளர் சங்கம்
ஃபெப்சி தொழிலாளர் இல்லாமல் படப்பிடிப்பு - தயாரிப்பாளர் சங்கம்

By

Published : Aug 7, 2021, 6:33 PM IST

சென்னை: அண்ணா சாலையில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அச்சங்கத்தின் தலைவர் முரளி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மாறாக ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஃபெப்சியுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி செல்லாது என்றும், ஒப்பந்தம் தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி படப்பிடிப்புக்கு வேண்டிய ஆட்களை பணியமர்த்திக்கொள்ள போவதாகவும் கூறினர்.

சட்ட நடவடிக்கை

படப்பிடிப்பை நிறுத்தும் வகையில் யாரெனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஃபெப்சி தொழிலாளர் இல்லாமல் படப்பிடிப்பு - தயாரிப்பாளர் சங்கம்
ஃபெப்சி தொழிலாளர் இல்லாமல் படப்பிடிப்பு - தயாரிப்பாளர் சங்கம்

அதேபோல திரையரங்க உரிமையாளர்கள் புரோஜக்டர் வாடகையாக தயாரிப்பாளர்களிடம் பணம் வசூலிப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details