சென்னை: கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பர். நடிகர் ஸ்ரீ காந்த் திரையுலகில் நுழைவதற்கு முன், அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற பலரின் திரைப்படங்களில், ஸ்ரீ காந்த் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின்னர் 80களின் தொடக்கத்தில் திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்தார் ஸ்ரீகாந்த்.