தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: 5ஆவது முறையாக விருது வாங்கி அசத்தல்! - Central Health and Family Welfare Department

சென்னை: உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

Award winning Minister Vijayabaskar
விருது பெறும் அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Nov 30, 2019, 5:57 PM IST

Updated : Nov 30, 2019, 7:56 PM IST

டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது.

இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஆகியோரிடம் இருந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

விருது வாங்கிய தமிழ்நாடு

மேலும் உடல் உறுப்பு தானத்தை மிகச் சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த மருத்துவமனைக்கான விருதும், இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமி என்பவருக்கு இறந்தவர் உடலில் இருந்து இந்தியாவிலேயே முதன்முறையாக இருகைகளையும் பொருத்திய சாதனைக்காக (Bilateral Hand Cadaveric Successful Transplantation) சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் ரமாதேவிக்கும் விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அமைச்சர் வழங்கிய அன்பளிப்பு!

Last Updated : Nov 30, 2019, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details