வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருநாள் ஆகியுள்ள நிலையில் இன்று (அக். 29) அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணிவரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தமிழ்நாடு வெதர் மேன் என அழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார், அப்போது பேசிய அவர், மழையின் தாக்கம் போக போக குறையும், சிறிய இடைவெளி விட்டு பெரிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடம் தென் மற்றும் வட தமிழ்நாட்டில் மழையின் அளவு பொறுத்தவரை சராசரியை விட அதிகமாக இருக்க கூடும் என்பதே தற்போதைய கணிப்பு என தெரிவித்தார்.
எல்லா மழையையும் நாம் 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையுடன் ஒப்பிடக் கூடாது. இன்று பெய்தது கன மழைதான் சாலைகள் தண்ணீர் தேக்கம் சில மணி நேரங்களில் சரியாகி விடும். வருகின்ற நவம்பர் மாதத்தில் நல்ல மழை எதிர்பார்க்கின்றோம், ஆனால் 2015ஆம் ஆண்டு பெய்த மழை அப்படி அல்ல, அப்போது ஆறுகள் நிரம்பி வழிந்தது.