தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather report  tamil nadu weather report  rain update  tamil nadu rain update  TN Weather Update  chennai meterological department  தமிழ்நாட்டில் மழை  மழை நிலவரம்  வானிலை அறிக்கை  வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு வானிலை அறிக்கை  தமிழ்நாடு மழை நிலவரம்
தமிழ்நாட்டில் மழை

By

Published : Apr 30, 2022, 5:56 PM IST

சென்னை:இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஏப். 30) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நாளை (மே. 1) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

பதிவான மழை:கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை 4 செ.மீ, பூதபாண்டி 3 செ.மீ, இரணியல், சூரலக்கோடு, பேச்சிப்பாறை, காங்கேயம், பந்தலூர் தாலுகா அலுவலகம் தலா 2 செ.மீ, சித்தார், புத்தன் அணை, பொள்ளாச்சி, உதகமண்டலம், பெருஞ்சாணி அணை, தேவாலா, குந்தா பாலம், திருச்செங்கோடு தலா 1 செ.மீ மழை பாதிவாகியுள்ளது.

மீனவர்கள் கவனத்திற்கு:லட்சத்தீவு கடல் பகுதிகளில் மே 3ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மே 4ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 15 அடி கிணற்றில் விழுந்த காளை!

ABOUT THE AUTHOR

...view details