தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... - வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu weather report  weather report  rain  heavy rain  tamil nadu rain update  rain update  metrological center  chennai metrological center  வானிலை அறிக்கை  வானிலை நிலவரம்  மழை  கனமழை  தமிழ்நாட்டில் கனமழை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  புயல்  மீனவர்களுக்கு எச்சரிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்
மழை

By

Published : Nov 9, 2021, 2:08 PM IST

சென்னை:தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழ்நாடு கரையை நெருங்ககூடும். இதனால்,

09.11.2021:டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதீத கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

கனமழை

11.11.2021:திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12.11.2021:வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

13.11.2021:நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்,

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

மகாபலிபுரம், செய்யூர் தலா 12 செ.மீ, சித்தார்), மரக்காணம், வானூர், ஓட்டப்பிடாரம், சிவலோகம் தலா 9 செ.மீ, சிவகிரி, மதுராந்தகம், புதுச்சேரி கன்னிமார், களியல் தலா 8 செ.மீ, மயிலாடி, உத்திரமேரூர், திருக்கழுகுன்றம், வளவனூர், பேச்சிப்பாறை தலா 7 செ.மீ, தொண்டையார்பேட்டை, திண்டிவனம், பெரம்பூர், கேளம்பாக்கம், திருப்போரூர், பெருஞ்சாணி அணை, குழித்துறை, பாளையங்கோட்டை, சூரலக்கோடு, புத்தன் அணை தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல்:இன்று (நவ.9) முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்றும் நாளையும் (நவ.9,10) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அடுத்த இரு தினங்களுக்கு (நவ.10,11) தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அரபிக்கடல்: இன்றும் நாளையும் (நவ.9,10) மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் இன்று (நவ.9) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தினால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..!

ABOUT THE AUTHOR

...view details