சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜன.25) உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இன்று (ஜன.26) மாலை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பை தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார்.
அதில்,
'வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி (ஒரே கட்டம்) : 28-01-2022