சென்னை:பெரும்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வரிய குடியிருப்பு பகுதியில் கேரளா அமைச்சர் ஆய்வு, கேரளாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆயத்தப்பணியாக நேற்று (ஜன.5) ஆய்வு செய்தார். சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம் திட்டம் குடியிருப்பு பகுதியில் கேரளா மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜன் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பார்வையிட்டு பின் கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்தி பணிகளை குறித்து துறை அரசு அதிகாரிகளிம் கேட்டறிந்தார்.
முன் மாதிரி திட்டதாக தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான உறுதியான வீடுகளை கட்டிகொடுக்கப்பட்டதை அறிந்து இதே போல் கேரளா மாநிலத்திலும் கட்டிகொடுக்க, சென்னைக்கு நேற்று(டிச.5) வந்த கேரளா அமைச்சர் ராஜன் பார்வையிட்டு திட்டப்பணிகள் குறித்து கேட்டறித்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் வாழ்வாதரத்திற்காக பல்வேறு திறன்பயிற்சிகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக இலகுரக ஓட்டுநர் பயிற்சி, அழகுகலை நிபுணர் பயிற்சி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பயிற்சி, போன்ற பயிற்சிகள் இந்த நிதி ஆண்டில் 361 நபர்களுக்கும் கணிணிபயிற்சி, தையல் பயிற்சி, இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சி, போன்ற 18 விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டது, மேலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 22 விதமான பயிற்சிகள் 1324 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் மொத்தம் 1,868 இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் பயனடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தால் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்பட்டு அந்த பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 81 நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் அழகு கலை நிபுணர் பயிற்சி பெற்றவர்களுக்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர். பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு அரசு அல்லது தனியார் வேலை கிடைக்க இந்த பயிற்சி வழிவகை செய்கிறது.
இதையும் படிங்க:மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி