சென்னை :இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழ்நாடெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) " G " அல்லது "அ" என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டும் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K)இன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே . அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே “G” அல்லது “அ” என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.