தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரஇறுதி நாட்கள் எதிரொலி: "600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" - தமிழக போக்குவரத்துக் கழகம்! - today latest news

Tamil Nadu Transport Corporation: வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை, கோவை, உள்ளிட்ட நகரங்களில் கூடுதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Transport Corporation
வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:06 PM IST

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏனெனில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறையை ஒட்டி வெளியூர் பயணங்களுக்கு பலரும் திட்டமிடுவர். பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில் வழக்கமான பேருந்துகள் போதுமானதாக இருக்காது.

எனவே தான் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வார இறுதியை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று (நவ. 3) சென்னையில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருவில் இருந்து மற்ற நகரங்களுக்கு 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக வரும் 5ஆம் தேதி ஞாயிறு அன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வார இறுதிக்கு முன்பாக 600 கூடுதல் பேருந்துகளும், வார இறுதி முடிந்த பின்னர் 600 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.

மேலும், இதில் முன்பதிவு இல்லாத பேருந்துகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஞாயிறு அன்று வருகிறது. இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறை. வார இறுதியில் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே நவம்பர் 10 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களும் விடுப்பு எடுத்துக் கொள்ள பலரும் திட்டமிட்டு, வரும் 9ஆம் தேதி வியாழன் அன்று இரவு முதலே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பர். அத்தகைய சூழ்நிலையில் பயணிகளுக்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details