தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா: பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் கரோனா பரவல்

தமிழ்நாட்டில் இன்று (செப். 23) புதிதாக 1,745 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona update  corona  corona  tamil nadu corona  corona count  tamil nadu corona count  tamilnadu corona update  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  கரோனா விபரம்  கரோனா நிலவரம்  கரோனா எண்ணிக்கை  தமிழ்நாட்டில் கரோனா பரவல்  கரோனா பரவல்
கரோனா

By

Published : Sep 23, 2021, 8:55 PM IST

Updated : Sep 23, 2021, 9:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59ஆயிரத்து 516 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,744 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,745 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இறப்பு விபரம்

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 564 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் 26 லட்சத்து 52ஆயிரத்து 115 நபர்கள் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது 17ஆயிரத்து 121பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் 8 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகள் என 27 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 427ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக 226 நபர்கள், சென்னையில் 722 நபர்கள், ஈரோட்டில் 116 நபர்கள், செங்கல்பட்டில் 107 நபர்கள் என அதிகளவில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 5,48,514;

கோயம்புத்தூர் - 2,41,143;

செங்கல்பட்டு - 1,67,957;

திருவள்ளூர் - 1,17,293;

ஈரோடு - 1,01,150;

சேலம் - 97,634;

திருப்பூர் - 92,394;

திருச்சிராப்பள்ளி - 75,618;

மதுரை - 74,417;

காஞ்சிபுரம் - 73,687;

தஞ்சாவூர் - 72,890;

கடலூர் - 63,143;

கன்னியாகுமரி - 61,578;

தூத்துக்குடி - 55,740;

திருவண்ணாமலை - 54,093;

நாமக்கல் - 50,204;

வேலூர் - 49,258;

திருநெல்வேலி - 48,743;

விருதுநகர் - 45,950;

விழுப்புரம் - 45,315;

தேனி - 43,361;

ராணிப்பேட்டை - 42,924;

கிருஷ்ணகிரி - 42,631;

திருவாரூர் - 39,909;

திண்டுக்கல் - 32,719;

நீலகிரி - 32,497;

கள்ளக்குறிச்சி - 30,794;

புதுக்கோட்டை - 29,604;

திருப்பத்தூர் - 28,841;

தென்காசி - 27,251;

தர்மபுரி - 27,407;

கரூர் - 23,461;

மயிலாடுதுறை - 22,628;

ராமநாதபுரம் - 20,298;

நாகப்பட்டினம் - 20,290;

சிவகங்கை - 19,728;

அரியலூர் - 16,635;

பெரம்பலூர் - 11,877;

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025;

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083;

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ரோடு இருந்தா மட்டும் தான் கல்யாணம் - பெண்ணின் குரலுக்கு செவிமடுத்த அரசு

Last Updated : Sep 23, 2021, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details