தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 2,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி - tamil nadu today corona cases

தமிழ்நாட்டில் இன்று 2,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 2,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Nov 7, 2020, 6:17 PM IST

Updated : Nov 7, 2020, 7:41 PM IST

18:13 November 07

தமிழ்நாட்டில் இன்று (நவ.7) 2,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,41,488 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து இதுவரை 7,11,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,352 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் இன்று 25 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,324ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 603 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 2,04,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் இன்று 79,328 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,02,11,706 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,04,86,338 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 80,112 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 66 அரசு மருத்துவமனைகள், 139 தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 205 மையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு தற்போது 18,966 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊழியருக்கு கரோனா! - காமராஜர் பல்கலைக்கழகம் மூடல்!

Last Updated : Nov 7, 2020, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details