சென்னை:தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழவினருடன் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மேலும் பள்ளிகளில் மும்மொழி கற்கவும், தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறுகையில், “மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால் அதை நிராகரிக்க வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்கள் சங்கமும் கோரிக்கை வைத்தோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் அந்த கல்விக்கொள்கையை விடுத்து, தமிழ்நாட்டிற்கு அரசுக்கு என தனி கள்விக்கொள்கையை கொண்டு வர ஒரு குழு ஏற்படுத்தி உள்ளார். அந்தக்குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கையை உருவாக்கி இந்தியாவிற்கே முன் மாதிரியாக முதலமைச்சர் செயல்படுகிறார்.