சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, "புத்தாண்டு தினத்திலே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட புத்தாண்டு செய்தியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்தாண்டு நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் நாளான இன்றே அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்து உள்ளார்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 53ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் மாற்றியவர், கருணாநிதி. அதேபோல் தான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் கூறி வருகிறார்.