தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குன்றத்தூரைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

tamil-nadu-teacher-society-given-essential-food-items-to-sc-slash-st-communties-in-kundrathur
tamil-nadu-teacher-society-given-essential-food-items-to-sc-slash-st-communties-in-kundrathur

By

Published : Apr 12, 2020, 9:52 AM IST

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தர்ப்பினரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும், அருகில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், குளியல் சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதன் மாநிலத் தலைவர் தியாகராஜன் நேரில் சென்று வழங்கினார்.

நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

மேலும் இதுபோன்ற உதவிகளை மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் செய்யவுள்ளனர்.

இதையும் படிங்க:ஊர் திரும்ப முடியாதவர்களுக்கு ஆட்சியர் செய்த ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details