சென்னை:தமிழ்நாட்டில் 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று வெளியாகும் செய்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் சில ஊடகங்கள் கொண்டு சேர்க்கிறது என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக பொய்யான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?.