சென்னை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமாரின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துகின்ற தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆகும். தன்னாட்சி அமைப்பான இதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பழனிக்குமாரின் பதவிக்காலம் இம்மாத (2023 மே) இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி வரை அவரின் பதவி காலத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பழனிக்குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் ஆர்.என். ரவி!