தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட இடி, மின்னல், பற்றிய விழிப்புணர்வு குறும்படம்.
'பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம்' தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!
12:46 November 16
11:36 November 16
சென்னை:தமிழ்நாட்டில் கனமழை பெய்துவருவதால் பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம் என, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துவருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
அதேபோன்று பொது மக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்லவோ வேண்டாம். பெய்து வரும் தொடர் மழையால் இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்கக் கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது, நீர்நிலைகளில் குளிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பொது மக்கள் பின்பற்றுமாறு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.