தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா ஊரடங்கு: இணையதளம் மூலம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை! - வலைதளம் மூலம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை

சென்னை: தமிழ்நாடு சிறப்பு காவல் ஆயுதப்படையினர் இணையதளம் மூலமாக கரோனா நோயாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

வலைதளம் மூலம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை!
வலைதளம் மூலம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை!

By

Published : May 28, 2021, 6:36 PM IST

தமிழ்நாட்டில் தளர்வில்லா முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் பலர் பணப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.

இதனைத் தடுப்பதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல் ஆயுதப்படையினர் இணைந்து "letsfightcorona.com” என்ற இணையதளத்தை தொடங்கி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை இணைத்துள்ளனர்.

ஆக்ஸிஜன், அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் இணையதளம் மூலமாக அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இதுதவிர கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆதரவற்றோருக்கு உணவு, ஆம்புலன்ஸ் சேவை, மூத்த குடிமக்களுக்கு உதவி போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு சிறப்பு காவல் ஆயுதப்படையினர் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், 100 லிட்டர் சானிடைசர் என மொத்தம் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சென்னை - எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநரான எழிலரசியிடம் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: வரும் வாரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனை

ABOUT THE AUTHOR

...view details