சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அமல்படுத்தினார். இந்த திட்டமானது செப்.15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளில் பசியின்றி கல்வி கற்பதை உறுதி செய்ய முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 1500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வேகப்படுத்தும் திமுக..!; பின்னணி என்ன..?
மாற்றியமைக்கப்பட்ட உணவு பட்டியல்:
திங்கள்: ரவா உப்புமா - காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா - காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா - காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா - காய்கறி சாம்பார்.
செவ்வாய்: ரவா காய்கறி கிச்சடி அல்லது சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி.