கடந்த சில ஆண்டுகளாகவே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2018-2019 கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 92 ஆயிரத்து 943 மாணவர்களும், 2018-19 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 90 ஆயிரத்து 150 மாணவர்களும், 2018-2019 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 20 ஆயிரத்து 692 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
2019-20 நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 1 லட்சத்து 2ஆயிரத்து 98 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 9ஆயிரத்து 955 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 91ஆயிரத்து 459 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1309 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 22ஆயிரத்து 644 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1,952 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.