தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

+2 தேர்வு விடை குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் கசிவு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு! - HSC exam answer key

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்குவதற்கு முன்பாகவே, விடை குறிப்புகள் சமூக தளங்களில் வெளியானது எப்படி என விசாரித்து தேர்வுத்துறை அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 8, 2023, 12:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்கள் மாவட்டங்களில் விருந்து சேகரிக்கப்பட்டுப் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விடைத்தாள் திருத்தப்பட்டு மே ஐந்தாம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி வரும்‌ 10-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்காக 79 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடவாரியாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விடை குறிப்புகள் தேர்வு துறை சார்பாக தயாரிக்கப்பட்டு அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விடை குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு தேர்வு துறையால் தயாரித்து அளிக்கப்பட்ட விடை குறிப்புகள் அனைத்து பாடங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்வித்துறை, தேர்வு துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. எங்கே கசிந்தது? யார் கசியவிட்டார்கள் என்பது குறித்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அரசுத் தேர்வு துறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் தேர்வு நடத்தும் பணியினை முழுவதும் கல்வி துறை சார்ந்த அதிகாரிகளைச் செய்து வருகின்றனர். தேர்வுத் துறையில் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல்கள் சென்றவுடன் தற்போது அவை வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அரசு தேர்வு துறையில் வழங்கப்படும் விடை குறிப்புகள் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பின்பும் வெளியே வராமல் இருக்கும். ஆனால் தற்பொழுது பள்ளி கல்வித்துறையிலிருந்து அனைத்து தகவல்களும் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தேர்வு துறையிலிருந்து அனுப்பப்பட்ட விடை குறிப்புகள் யார் மூலம் வெளியே கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் யார் கசிய விட்டார்கள் என்பது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை.. ஓபிஎஸ்க்கு கல்தா.. ஈபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details