தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் லாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை - Sand Lorry Owners Association meeting

மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு அரசுக்கு 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மணல் லாரி
மணல் லாரி

By

Published : Oct 26, 2021, 8:07 PM IST

சென்னை: குரோம்பேட்டையில் தனியார் மண்டபத்தில் இன்று (அக்.26) தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மணல் லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜாமணி, "முறையாக ஆவணங்கள் வைத்துக்கொண்டு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளை காவல் துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் நிறுத்தி பொய்யான வழக்குகளைப் போட்டு லாரிகளை பறிமுதல் செய்கின்றனர். அனைத்து எம்சாண்ட் மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

மணல் லாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

எம் சாண்டின் தரம் மோசம்

லாரிகளில் பாரம் ஏற்றும்போது கண்டிப்பாக தரச்சான்றிதழ் நகல் வழங்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறாமல் தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி செய்யும் கிரஷர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து செயற்கை மணல் நிறுவனங்களிலும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 300 ரூபாய் வரை விலையேற்றம் செய்ததை உடனடியாக திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மணல் குவாரிகள் திறக்கப்படும்

மேலும் எம் சாண்டின் தரம் மிகவும் மோசமானதாகவும் விலை அதிகமாகவும் உள்ளது. ஆற்று மணலுக்கு மாற்று எம் சாண்ட் கிடையாது. 2017ஆம் ஆண்டு முதல் மணல் குவாரிகள் செயல்படாததால் லாரிகள் அதிகப்படியாக இயங்கவில்லை. இதனால் லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர்.

தீபாவளிக்குப் பிறகு மணல் குவாரிகள் திறக்கப்படும் என கனிம வளத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலம்மாள் பள்ளியில் " பாதுகாப்பான தீபாவளி " விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details