சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையானது பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகம், மேற்கு தமிழகம், மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் பருவமழையானது பரவலாக பெய்து வருகிறது.
குறிப்பாக, வடதமிழகத்தில் எதிர்பார்த்த மழை அளவு என்பது இல்லை. குறிப்பாக சென்னையில் இயல்பை விட குறைவாக உள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு என்பது 19.4 மீ.மீ ஆகும். இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 49.5 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட் 23 செ.மீ, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் பகுதியில் 15 செ.மீ, மூலைக்கரைப்பட்டி 14 செ.மீ, நம்பியூர் 12 செ.மீ, அவினாசி 12 செ.மீ, ஆழியார் 11 செ.மீ, TNAU கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
வத்திராயிருப்பு , தூத்துக்குடி, பவானிசாகர் , விருதுநகர், ராஜபாளையம், அழகரை எஸ்டேட் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொத்தவாச்சேரி, ஓட்டப்பிடாரம், குன்னூர் PTO, மேலூர், திருப்பூர் PWD, ஆண்டிபட்டி, களியல் பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது
கோயம்புத்தூர்-தெற்கு, ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, இடையப்பட்டி, ராமநாதபுரம் KVK AWS, மேட்டுப்பாளையம், பூதலூர், மாம்பழத்துறையாறு, கடலாடி, களக்காடு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் கோவை, திருச்சி, மதுரை, சேலம், காரைக்கால், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தேனி, மயிலாடுதுறை, நீலகிரி, சிவகங்கை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், திருபத்தூர், தருமபுரி, அரியலூர் ஆகிய மாவடங்களில் ஒரு சில இடங்களில் 1 செ.மீ முதல் 6 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.