தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - chennai climate

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மழை நிலவரம்  மழை  கனமழை  தமிழ்நாட்டில் மழை  வானிலை அறிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  மழை நிலவரம்  rain  rain update  heavy rain  tamilnadu rain update  tamilnadu rain  weather report  Chennai Meteorological Center  climate  chennai climate  மீனவர்களுக்கான எச்சரிக்கை
மழை

By

Published : Oct 1, 2021, 1:51 PM IST

சென்னை:இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 3.1 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

அக்டோபர் 3:புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 4: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 5: கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையின் வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

மணமேல்குடி 19 செ.மீ, சிவகங்கை, புலிப்பட்டி தலா 12 செ.மீ, வத்தலை அணை, நத்தம் தலா 11 செ.மீ, பவானி, பெரம்பலூர் தலா 10 செ.மீ, புதுக்கோட்டை, திருச்செங்கோடு, பெரம்பலூர் தலா 9 செ.மீ, தோகைமலை, பெருங்கலூர் தலா 8 செ.மீ, வேடசந்தூர், ராசிபுரம், சோழவந்தான், அரவக்குறிச்சி தலா 7 செ.மீ, திருப்பத்தூர், தேவலா, ஆர். எஸ். மங்களம் தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்:இன்று (அக்டோபர்.1) தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 2, 3 ஆகிய நாள்களில், தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடக்கம் - விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details