தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை"- காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம் - காவிரி நதநீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை

சென்னை : காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

chennai pwd
chennai pwd

By

Published : Apr 30, 2020, 9:35 AM IST

இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டப் போராட்டத்தின் விளைவாகக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 2018 ஏப்ரல் 1ஆம் தேதி அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

அதில் ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 2ஆம் தேதி பிறப்பித்த இறுதி ஆணையைக் கருத்தில் கொண்டு தான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.

இந்நிலையில் 2019 மே மாதம் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது.

இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்குத் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.

மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளைக் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிங்க : கட்டுப்பாட்டு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமி நாசினி பவுடர் - முதலமைச்சர்

For All Latest Updates

TAGGED:

CMWB TN PWD

ABOUT THE AUTHOR

...view details