தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணா நதி நீர் திருட்டு: பொதுப்பணித்துறையின் அதிரடி முடிவு - Tamil Nadu PWD decided to close small sluices

கண்டலேறு-பூண்டி கால்வாய் ஓரமாக சட்டவிரோதமாக கிருஷ்ணா நீரை எடுக்கும் விவகாரத்தில் இதனால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க கால்வாயில் உள்ள சிறு மதகுகளை மூட முடிவு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 24, 2023, 6:57 PM IST

சென்னை:கண்டலேறு-பூண்டி (கேபி) கால்வாய் ஓரம் வசிக்கும் விவசாயிகள் சட்டவிரோதமாக கிருஷ்ணா நீரை எடுப்பது தொடர்பாக ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், தண்ணீர் திருட்டை தடுக்க கால்வாயில் உள்ள சிறு மதகுகளை மூட முடிவு செய்துள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் ஏரிகளில் பூண்டி சத்திய மூர்த்தி தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதய ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகள் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்துள்ளனர். இதனால் பூண்டி ஏரிக்கு சுமார் 330 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனினும், 152 கி.மீ. நீளம் கொண்ட கண்டலேறு-பூண்டி (கேபி) கால்வாய் ஓரம் வசிக்கும் விவசாயிகள் சிறு மதகுகள் அல்லது மோட்டார் எந்திரம் மூலம் கிருஷ்ணா நதி நீரை உறிஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திராவை சேர்ந்த நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கால்வாயை கண்காணிப்பதை தீவிரப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் 152 கிமீ நீளமுள்ள கால்வாயில் 900 சிறு மதகுகள் உள்ளன எனவும் கால்வாயை ஒட்டி வசிக்கும் விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றுவதற்கு இந்த மதகுகளை தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும் தமிழக பொதுப்பணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அண்டை மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் படிப்படியாக சிறிய மதகுகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் பொறியாளர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தெலுங்கு-கங்கை திட்டத்தின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கடந்த மார்ச் முதல் வாரத்தில் கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது.

இருப்பினும், விவசாயிகள் பாசனத்திற்காக சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கத் தொடங்கியதால், நீர் வரத்து வெகுவாகக் குறைந்தது. ஒரு கட்டத்தில், வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது எனவும் இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் விழிப்புடன் இருக்கிறோம் என தெரிவித்தார். “அனைத்து மதகுகளும் மூடப்பட்ட பின்னர் வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு போதுமானதாக இருந்தாலும் கிருஷ்ணா நதி நீர் தேவைப்படுகிறது" என ஒரு அதிகாரி கூறினார்.

இது குறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தாலும் அடுத்த வருடம் (2024) ஜனவரி வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மெட்ரோ ஏரிகளில் தற்போதுள்ள நீர்மட்டம் போதுமானதாக இருக்கும் என்றார். மேலும் தற்போது தண்ணீர் பஞ்சம் இல்லை என தெரிவித்த அவர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்' என்றார்.

இதையும் படிங்க:சிகரம் தொட்ட நாயகனுக்கு சிறப்பான வரவேற்பு.. மேள சத்தத்தில் குலுங்கிய கோவளம்!

ABOUT THE AUTHOR

...view details