தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஆறாம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதே நாளில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்தது.
நாளை மாலையுடன் ஓய்கிறது பரப்புரை - 144 restraining order in Pondicherry
நாளை மாலையுடன் தமிழ்நாடு - புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை நிறைவடைவதால் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏப்ரல் நான்காம் தேதி மாலை 7 மணிவரை தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார். வழக்கமாக தேர்தல் பரப்புரை இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பரப்புரை முடிவுடையும். ஆனால் இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
நாளை மாலையுடன் தமிழ்நாடு - புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை நிறைவடைவதால் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை மாலை 7 மணி முதல் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.