தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 2 திருத்தியமைக்கப்பட்டத் தேர்வுத்திட்டம்! - tnpsc new update

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 (குரூப் 2) மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தை திருத்தியமைத்து வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

By

Published : Oct 22, 2019, 3:10 PM IST

Updated : Oct 22, 2019, 8:48 PM IST

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 (குரூப் 2) மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தை திருத்தியமைத்து அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. இரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும், முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

மேலும், பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றனர். இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையினைப் பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

முதனிலைத்தேர்வு:-

  • முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வு:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை
  • ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ மட்டும் தனித்தாளாக [(தாள்-1], தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வு 100 அதிக பட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 1½ மணி நேரம் நடைபெறும். இத்தேர்வில் தகுதிபெற 100க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும்.
    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை
  • தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
  • முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை

முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத்தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது தமிழ்நாடு மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும், என தேர்வானையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குரூப் - 2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மையில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Last Updated : Oct 22, 2019, 8:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details