தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC : அரசு பணியாளர் தேர்வில் புதிய நடைமுறைகள்.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு! - Current TNPSC exams 2023

TNPSC changes rules in oral tests and interviews : அரசு பணியாளர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்கும் விதமாக நேர்முகத் தேர்விற்கான புதிய நடைமுறைகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.

TNPSC
TNPSC

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 7:22 AM IST

சென்னை :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசுப் பணியாளர் நேர்முகத் தேர்விற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அதன் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதன்‌ ஒரு பகுதியாக நேர்முகத்‌ தேர்வுக்கு (Oral Test) அனுமதிக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ பெயர்‌, நிழற்படம்‌, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள்‌ மறைக்கப்பட்டு, அதற்குப்‌ பதிலாக விண்ணப்பதாரர்களை A, B, C, D முதலான எழுத்துக்களைக்‌ கொண்டு குறியீடு செய்து நேர்காணல்‌ அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர்‌ என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்புதிய நடைமுறைகளுடன்‌ ஏற்கனவே உள்ள Random shuffling முறையும்‌ சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால்‌ விண்ணப்பதாரர்கள்‌ மீது சார்புத்‌ தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்‌ நீக்கப்படுவதுடன்‌ வெளிப்படைத்‌ தண்மை அதிகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்‌ படுகிறது.

இதையும் படிங்க :புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர்: வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details