சென்னை:தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78), சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வாணி ஜெயராம் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.