தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2023, 1:39 PM IST

ETV Bharat / state

ஓய்வு பெற்ற காவலர் உயிர் நீத்தால் அரசு மரியாதை - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

பணியில் இருந்து ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உயிர் நீத்தால் காவல்துறை சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

சென்னை:ஓய்வு பெற்ற காவலர்கள் உயிர் நீத்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சீருடையுடன் சென்று இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அனைத்து மாநகர, மாவட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் காவல் துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் அவரது இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் காவல் படை தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும் இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு காவல் நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும். காலமான முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரி பார்த்து உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இரட்டை இலை வழக்கில் எடப்பாடிக்கு வெற்றி? உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details