கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஊரடங்கை மீறிய வழக்கில் இதுவரை ரூ. 19.17 கோடி அபராதம் - Tamil Nadu police collected Rs 19 crore
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறிய வழக்கில் இதுவரை 19 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 128 நாட்களில் 9,19,186 பேரை போலீசார் கைது செய்து விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 128 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 19 ஆயிரத்து 186 பேரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். 6 லட்சத்து 57 ஆயிரத்து 684 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.