சென்னை:நேபாளம் நாட்டில் இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் சுமார் 61 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த தனியார் சிலம்பம் பயிற்சி மையத்திலிருந்து சென்ற ஏழு பேர் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்று 10 தங்கம் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்த இவர்களை உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலம்பம் வீரர் ஜனா வசிகரன், நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்பப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். மொத்தம் 61 தங்கப் பதக்கங்களை தமிழ்நாடு வீரர்கள் வென்றனர்.