தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவர்களாகவே திருந்தாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் திருத்துவார்கள்: அதிமுக மீது ஸ்டாலின் காட்டம்! - கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும் நசுக்கும் அதிமுக அரசு

சென்னை: கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும் நசுக்கும் விதமாக அதிமுக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Sep 5, 2019, 6:20 PM IST

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புத்திசம் (தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A) பிரிவில் படித்து வந்தவர் த.கிருபாமோகன். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பில் இணைந்து செயல்பட்டதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியில் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் இணைந்து செயல்பட்டதற்காக மாணவர் ஒருவரை சென்னை பல்கலைக்கழகம் நீக்கி உத்தரவிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இச்செயல் அதிகார அத்துமீறல் எனவும் கடுமையாக சாடியுள்ளார். அதேபோல், மாணவர் மீதான இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமை ஆகியவற்றை நசுக்கிக் கொலை செய்யும் விதமாக இருப்பதாகவும், இந்த அதிகார அத்துமீறலை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. அதிமுகவினர் அவர்களாகவே திருந்தாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் திருத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவர் கிருபாமோகன்

மேலும்,“தி இந்து” குழுமத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும், பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய 'மாபெரும் தமிழ்க் கனவு', மற்றும் கலைஞர் பற்றிய 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்', 'ஒரு மனிதன் ஒரு இயக்கம்' ஆகிய நூல்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், எந்த காரணமுமின்றி அரங்கின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிகழ்ச்சி ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்னவென்று அரங்கின் உரிமையாளர் சொல்லவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details