தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகக்கு எதிராக டெட் ஆசிரியர்களை களமிறக்குவோம் - இளங்கோவன்

Teachers hunger strike: திமுகவை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் ஆசிரியர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளதாக, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாப்பஸ்..!
ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாப்பஸ்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:41 PM IST

2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன்

சென்னை:பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(Teachers Eligibility Test - TET) எழுதி தேர்ச்சி பெற்று, அரசு பணி கிடைக்காத தேர்வர்கள், தங்களுக்கு அரசு பணி வழங்க வலியுறுத்தி, 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 28ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றொரு சங்கமான பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பணியாளர்களாக உறுதி செய்யப்படாத தங்களுக்கு பணி வரன்முறை செய்யக் கோரியும், தங்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் நடத்திய சங்க பிரதிநிதிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி செயலாளர் என 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று அறிவித்தும், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.5) போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக பல அமைப்புகள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, தமிழக தலைமைச் செயலகச் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அச்சங்கத்தினர் ஆதரவளித்துள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமாெழி நேற்று செய்தியாளர்களிடம், 'பகுதிநேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தில் 2500 ரூபாய் அதிகரிக்கப்படும் என்றும், பத்து லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்' என்றும் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, இதனை ஏற்றுக்கொண்டு தங்களது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொகுப்பு ஊதியத்திலாவது பணி வழங்க கோரி, கடந்த ஏழு நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்தினோம். ஆனால், இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்து, அராஜக போக்கில் ஈடுபட்ட இந்த அரசு, பிசாசு ஆட்சி என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில், திமுகவிற்காக தெருத்தெருவாக ஆதரவு திரட்டினோம்; ஆனால், தற்போது எங்களுடைய ஆதரவை திரும்பப் பெற்று கொள்கிறோம். மேலும், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், திமுகவிற்கு எதிராக 40 தொகுதிகளில் ஆசிரியர்களை வேட்பாளராக நிறுத்தவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:போராட்டக் களத்தில் ஆசிரியர்கள் கைது: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details