தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2018-2019ஆம் ஆண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகவல்

சென்னை : 2018-2019ம் ஆண்டு நடைபெற்ற பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

tamilnadu open University Report
tamilnadu open University Report

By

Published : Jul 4, 2020, 10:34 AM IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டு முதல் இளநிலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பை வழங்கி வருகின்றது. இப்படிப்பினை தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் ( NCTE ) அன்று முதல் இன்று வரை அங்கீகரித்துள்ளது.

இதுவரை சுமார் 12 ஆயிரத்து 500 நபர்கள் பி.எட் படிப்பினை முடித்து தமிழ்நாடு முழுவதுமாக ஆசிரியர்களாக பணியில் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தின் அனுமதியுடன் 2018-19 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இச்சேர்க்கையின் மூலமாக தாங்கள் பி.எட் சேர்ந்துள்ளீர்கள் .

பி.எட், படிப்பிற்கு 2017-18 ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் 2018-19 இல் இருந்து UGC- இன் அனுமதியும் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018-19 இல் UGC-யின் முன்னனுமதி பெறாமல் பிஎட் சேர்க்கை நடைபெற்றுவிட்டமையால் , அச்சேர்க்கையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகம் 2018-19 ஆம் ஆண்டு சேர்க்கையை மிகுந்த வருத்தத்துடன் ரத்து செய்ய அறிவித்துள்ளது.

இச்சூழலில், தாங்கள் பல்கலைக்கழக்திற்கு சமர்பித்துள்ள பிஎட் சேர்க்கை , தேர்வு ஆகியவற்றிற்கான தொகையினை தங்களுக்கு அளிக்க பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள், வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கமிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என்ற உறுதியையும் தற்பொழுது வழங்குகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களுக்கு நவீனங்களின்றி எட்டாக் கனியான கல்வி!

ABOUT THE AUTHOR

...view details