தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்தநிலைப் பல்கலையில். கல்விக் கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகை - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகை அளிக்கப்படும் என துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

By

Published : Sep 16, 2021, 5:43 AM IST

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட துணைவேந்தர் பார்த்தசாரதி, "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா தமிழியம் என்ற புதிய குறுகிய கால பாடத்திட்டம் இந்தக் கல்வி ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்தரங்கம்

இதற்கான வகுப்பு மூன்று மாதங்கள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றவர்கள் இந்த குறுகிய கால பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து கொள்ளலாம்.

இதில், அண்ணாவின் கொள்கைகள் கோட்பாடுகள் அவர் ஆற்றிய தொண்டுகள் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த பாடத்தினை முடிப்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் பிஏ தமிழ், எம்ஏ தமிழ் ஆகிய பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details