தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பிஎஸ் ராமன் அறிவிப்பு! - வழக்கறிஞர் பிஎஸ் ராமன்

PS Raman: தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பிஎஸ் ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பிஎஸ் ராமன் அறிவிப்பு
புதிய தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பிஎஸ் ராமன் அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:25 AM IST

Updated : Jan 10, 2024, 2:32 PM IST

சென்னை: இன்று காலை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், இதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து போடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், என்றும் வழக்கிறிஞர்கள் உடன் இணைந்து பணியாற்றுவேன் எனவும் அறிவித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொடர்ந்து தொழில் புரிய போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்குப் பிறகு, திமுக அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, திமுக தலையிலான புதிய அரசு பதவியேற்றதும், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்தது.

இவ்வாறான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க 2021 மே மாதம் ஒப்புதல் வழங்கினார் என்பதும், இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளையும் சண்முக சுந்தரம் கையாண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா - காரணம் என்ன?

Last Updated : Jan 10, 2024, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details