தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபாநாயகர் அப்பாவு மீதான நிலஅபகரிப்பு புகார்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - அப்பாவு

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

MHC
MHC

By

Published : Jan 28, 2022, 6:55 PM IST

சென்னை: தமிழ்நாடு சபாநாயகர் மு. அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மு. அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க : காவலர்கள் மீது வயதான தம்பதி நில அபகரிப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details