சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (ஜூலை 12) காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 12 முதல் ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 12 காலை 6 மணி முதல் ஜூலை 19 காலை 6.00 மணி வரை சில செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
எதற்கெல்லாம் தடை
- புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்குத் தடை.
- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை.
- அனைத்து மதுக்கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு தடை.
- பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை.
- பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், உயிரியல் பூங்காக்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்கள்:தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு