தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தற்போதைய செய்தி

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu local body elections, தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் செய்தி

By

Published : Oct 13, 2019, 3:37 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் பதவிக்காலமும் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.

இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான உத்தரவில் இந்த உத்தரவை சேர்ந்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ‘பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்ய, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். இவர்களுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிட முடியாது. அனைவரும் சுயேச்சை வேட்பாளராக கருதப்படுவர். இவர்கள் யாருக்கும் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது. போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சுயேச்சை சின்னங்கள்தான் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீன அதிபருக்கு காஞ்சி பட்டை பரிசளித்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details