தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Online Rummy Ban: நாளை ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

நாளை ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!
நாளை ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

By

Published : Nov 30, 2022, 8:57 PM IST

சென்னை:தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது, முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த அக்.28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆளுநர் சில
விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டிருந்தார்.

ஆளுநர் கோரிய விளக்கம் மற்றும் அரசின் பதில் குறித்து, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கடந்த 24-ம் தேதி காலை ஆளுநரிடம் இருந்து விளக்கம் கோரப்பட்டது. 24 மணிநேரத்துக்குள் அதாவது 25-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அன்று செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது, முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா குறித்து கேட்டறிவறிவார் என கூறப்படுகிறது.

மேலும், ஆளுநர் தரப்பில் நாளை மாலைக்குள் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'பொது இடத்தில் விவாதிக்க தயாரா?' முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

ABOUT THE AUTHOR

...view details