தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் கல்வி அளிப்பது தமிழ்நாடுதான்'

இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

By

Published : Oct 8, 2020, 8:10 PM IST

சென்னை அம்பத்தூர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சி தொழில் துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண பணியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிவருவதாக பாரத பிரதமர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 5 லட்சத்தில் 46 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கிறது. புற்றுநோயை தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை அனைவரும் பாராட்டுகின்றனர். தொழில்துறையிலும் இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையை பொறுத்தவரையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 34 ஆயிரத்து 151 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கியிருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஆண்ட்ராய்டு போன்: தனியார் அமைப்பின் நேசக்கரம்!

ABOUT THE AUTHOR

...view details