தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் - மருத்துவ ஆலோசனை

இந்திய அளவில் தொலைத் தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்
இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்

By

Published : Dec 12, 2022, 8:59 PM IST

சென்னை: அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது 'அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டம்’. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி 'அனைவருக்கும் நலவாழ்வுத் திட்ட தினம்' கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு 'நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்' என்ற குறிக்கோளைக் கொண்டு உத்தரப்பிரதேசம், வாரணாசியில் 'அனைவருக்கும் நலவாழ்வுத் திட்ட தினம்' கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்களைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை 22 லட்சத்து 58 ஆயிரத்து 739 தொலைத் தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதில் சாதனைப் புரிந்து தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கான பாராட்டுச் சான்றிதழையும், கேடயத்தையும் மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க:தலைமைச்செயலகத்தில் தயாராகி வரும் அமைச்சர் அறை உதயநிதி ஸ்டாலினுக்கா?

ABOUT THE AUTHOR

...view details